திருப்பத்தூர் மாவட்டத்தில்500 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுவதற்காக நீர்வரத்துக் கால்வாய் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் உள்ள அணை, ஏரிகள், குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 30-க்கும் மேற்பட்ட ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.
இந்நிலையில், திருப்பத்தூர்மாவட்டம் கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆதியூர் ஊராட்சியில் உள்ள வாலேரி ஏரி முழுமையாகநிரம்பி உபரி நீர் நேற்று முன்தினம் வெளியேறியது. இதையடுத்து, உபரி நீர் வீணாகாமல் இருக்கவும், அந்த தண்ணீர் விவசாய பாசன வசதிக்காக கொரட்டி ஏரி வரை கால்வாய் அமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டி ருந்தது.
அதனடிப்படையில், தமிழகநீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உத்தரவின்பேரில் திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி தலைமையில் அங்கு கால்வாய் அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று முன்தினம் தொடங்கியது. இப்பணிகளை, எம்எல்ஏ நல்லதம்பி தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர், செய்தியாளர் களிடம் கூறும்போது, ‘‘ஆதியூர் ஊராட்சிக்கு உட்பட்ட வாலேரி ஏரி பழமை வாய்ந்த ஏரியாகும். இந்த ஏரி நிரம்பி உபரி நீர் வீணாவதை தடுக்கும் வகையில், வாலேரி முதல் கொரட்டி ஏரி வரை சுமார் 2 கி.மீட்டர் தொலைவுக்கு உபரி நீரை கொண்டு செல்ல போர்க்காலஅடிப்படையில் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
இதன்மூலம், ஆதியூர், எலவம்பட்டி, கொரட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சுமார் 500 ஏக்கருக்கும் மேற் பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இதன் மூலம் 25 ஆயிரம் விவ சாயிகள் பயனடைவார்கள்.
மேலும், கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். இப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகளும் நிரம்பி குடிநீர் ஆதாரத்தையும் பெருக்கும். இப்பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் குறிப்பிட்ட இடங்களில் குழாய்கள் புதைத்து அதன் மூலம் நீர் கொண்டு செல்லதிட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க உத்தரவிடப் பட்டுள்ளது’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago