வேலூர், தி.மலை மாவட்டங்களில் - நெற்பயிருக்கு காப்பீடு செய்ய வரும் 15-ம் தேதி கடைசி நாள் :

By செய்திப்பிரிவு

வேலூர், தி.மலை மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்டுள்ள கிராமங்களில் நெற் பயிருக்கு காப்பீடு செய்ய வரும் 15-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வேலூர் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் நெற்பயிர் காப்பீடு செய்ய 47 கிராமங்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளன. இந்த கிராமங்களில் கடன் பெறும் விவசாயிகள் அவர்கள் கடன் பெறும் வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்ககளில் விருப்பத்தின் பேரில் காப்பீடு செய்யப்படும்.

கடன் பெறாத விவசாயிகள் அருகே உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், அங்கீகரிக்கப்பட்ட பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் விருப்பத்தின் பேரில் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகத்துடன் காப்பீடு செய்துகொள்ளலாம்.

பிரீமியத் தொகை ஏக்கருக்கு ரூ.472 ஆகும். காப்பீடு செய்ய நவம்பர் 15-ம் தேதி கடைசி நாளாகும்’’ என தெரிவித்துள்ளார்.

தி.மலை

இதுகுறித்து தி.மலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மாவட்ட அளவில் பயிர்வாரி யாக சராசரி மகசூல் அடிப்படை யில் காப்பீடு தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பொதுத்துறை காப்பீடு நிறுவனமான இந்திய வேளாண் காப்பீட்டுக் கழகம், தி.மலை மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது. நெல் – 2 சிறப்பு பட்டத்துக்கு காப்பீடு தொகை செலுத்த வரும் 15-ம் தேதி கடைசி நாளாகும். பயிர் கடன் பெறும் விவசாயிகள், கூட்டுறவு வங்கிகள் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் காப்பீட்டு தொகையை செலுத்தலாம்.

கடன் பெறாத விவசாயிகளும் காப்பீட்டு தொகையை செலுத்தலாம். ஓர் ஏக்கருக்கு ரூ.458.25 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தி.மலை மாவட்டத்தில் 67,381 விவசாயிகள், தங்களது பயிர் களுக்கு காப்பீடு செய்துள்ளனர். பயிர் காப்பீடு காலக்கெடு முடிவதற்குள் பயிர் காப்பீட்டு தொகையை விவசாயிகள் செலுத்தி பயன்பெறலாம்” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்