கடலூர் மாவட்டத்தில் பலத்த மழை - 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை நீர் சூழ்ந்தது :

கடலூர் மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை மழை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் கடந்த 9 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. நேற்றும் மழைபெய்தது. மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடலூர், பரங்கிப் பேட்டை, சேத்தியாத்தோப்பு, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில் ஆகிய பகுதிகளில் குடியிருப் புகளில் தண்ணீர் புகுந்துள்ளது. காட்டுமன்னார்கோவில்- ஜெயங்கொண்டம் சாலையில் வீரானந்தபுரத்தில் இந்த தரைபாலம் மழை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கடலூர்- சிதம்பரம் சாலையில் குடிகாடு பகுதியில் மழை நீர் சாலையில் வழிந்தோடியது. சில இடங்களில் விளைநிலங்களை மழை தண்ணீர் சூழ்ந்துள்ளது. விருத்தாசலம், மங்களூர், நல்லூர் வட்டாங்களில் ஆயிரம் ஏக்கர் பருத்தியும், 3 ஆயிரத்து 500 ஏக்கர் உளுந்தும், 500 ஏக்கர் மக்காச்சோளமும் பாதிப்படைந்துள்ளது. மொத்தமாக மாவட்டத்தில் மழையால் 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிப்படைந்துள்ளன.

மாவட்டத்தில் கெடிலம், தென் பெண்ணையாறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் அதிக அளவில் தண்ணீர் செல்கிறது. நேற்றைய மழையளவு பரங்கிப்பேட்டையில் 126 மிமீ, காட்டு மன்னார்கோவிலில் 124 மிமீ, அண்ணாமலைநகரில்121.8 மிமீ, கடலூரில் 98.3 மிமீ, சிதம்பரத்தில் 88.2 மிமீ, புவனகிரியில் 87.மிமீ,கொத்தவாச்சேரியில் 79.மிமீ, லால்பேட்டையில் 75.6 மிமீ, பண் ருட்டியில் 69 மிமீ, முஷ்ணத்தில் 66.2 மிமீ, வேப்பூரில் 55 மிமீ, விருத்தாசலத்தில் 55 மிமீ, வடக்குத்தில் 42மிமீ மழை பெய்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்