மலட்டாற்றில் 50 ஆண்டுக்குப் பின் நீர் வரத்து :

By செய்திப்பிரிவு

தென்பெண்ணையாற்றில் திருக்கோவிலூர் அணைக்கட்டில் இருந்து மலட்டாறு பிரிகிறது.மலட்டாறு திருவெண்ணெய்நல் லூர், அரசூர், காரப்பட்டு, தன்னாலம்பட்டு, ஆனத்தூர் வழியாக பண்ருட்டி வட்டம் ஒறையூர், கரும்பூர், திருத்துறையூர், வரிஞ்சிப்பாக்கம், கட்டமுத்துப்பாளை யம், ராசாப் பாளையம், திராசு வழியாக செல்கிறது. மலட்டாறு இரண்டாக பிரிந்து இதில் ஒருபகுதி நத்தம் வழியாக கெடிலம் ஆற்றிலும், மற்றொரு பகுதி ஆறு கட்டமுத்துபாளையத்தில் இருந்து

வாலாஜா வாய்க்கால் வழியாக திருவதிகை கெடிலம் ஆற்றிலும் கலக்கிறது. மலட்டாறு கடலூர் ,விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 66 கிராம மக்களின் வாழ் வாதாரமாக திகழ்கிறது.

மலட்டாற்றில் கடந்த 1972- ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது மண்மேடு ஏற்பட்டு நீர்வரத்து இல்லாமல் இருந்து வந்தது. பொதுப்பணித் துறையால் டெண்டர் விடப்பட்டு மண் மேடுகள் அகற்றப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டன. தொடர் கன மழை பெய்து வருவதால் கடந்த 2 நாட்களாக மலட்டாற்றில் தண்ணீர் வரத்து உள்ளது. இதைக்கண்டு இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச் சியடைந்துள்ளனர். இதனால் இப் பகுதியில் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டமும் உயரும். குடிநீர் தட்டுப்பாடும் நீங்கும் என்றுஇப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்