சிவகங்கை மாவட்டத்தில் 17 பேருக்கு டெங்கு : சங்கராபுரத்தில் மட்டும் 6 பேர் பாதிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் 17 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட் டுள்ளனர். இதில் காரைக்குடி சங்கராபுரத்தில் மட்டும் 6 பேர் பாதிக்கப்பட்டனர்.

சிவகங்கை மாவட்டத்தில் 3 வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. தினமும் 50 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில் மாவட்டம் முழுவதும் நவ.1-ம் தேதியில் இருந்து இதுவரை 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் காரைக்குடி சங்கராபுரத்தில் மட்டும் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சுகாதாரத் துணை இயக்குநர் ராம்கணேஷ் கூறியதாவது: சங்கராபுரம் பகுதியில் மருத்துவ முகாம்கள் நடத்த 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 4 சுகாதார ஆய்வாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வரு கின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் படிப்படியாகக் குணமடைந்து வருகின்றனர். காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக அருகேயுள்ள அரசு மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுக வேண்டும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE