கிளாசிக் நீட் அகாடமி மாணவர்கள் ‘நீட்’ தேர்வில் சாதனை :

நீட் தேர்வில் கிளாசிக் நீட் அகாடமி மாணவர்கள் சேலம் மாவட்ட அளவில் முதல் 6 இடங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இதுதொடர்பாக கிளாசிக் நீட் அகாடமி இயக்குநர் டாக்டர் டி.பெரியசாமி கூறியதாவது:

நாடு முழுவதும் 15.44 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினர். தேர்வு முடிவு வெளியான நிலையில், அதில் 58 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் 138 மதிப்பெண் என்பது பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மற்றும் இட ஒதுக்கீடு அல்லாத பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணாகும்.மற்ற அனைத்துப்பிரிவினருக்கு 108 மதிப்பெண் தேர்ச்சி மதிப்பெண்ணாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிளாசிக் நீட் அகாடமியில் பயின்ற மாணவர்கள் சேலம் மாவட்ட அளவில் முதல் 6 இடங்களைப் பெற்று தொடர்ச்சியாக நான்காம் ஆண்டு சாதனையைப் படைத்துள்ளனர்.

சேலம் மாவட்ட அளவில் மாணவர் பிரவீன் சக்திவேல், 668 மதிப்பெண் பெற்று முதலிடத் திலும், மாணவர் தேவமூர்த்தி, 658 மதிப்பெண் பெற்று இரண்டாமிடத்திலும், மாணவி கஸ்தூரி 654 மதிப்பெண் பெற்று 3-வது இடத்திலும், மாணவர் கோகுல் 653 மதிப்பெண் பெற்று 4-ம் இடத்திலும், மாணவர் நந்தகுமார் 650 மதிப்பெண் பெற்று 5-ம் இடத்திலும், மாணவர் அபிநாதன் 650 மதிப்பெண் பெற்று 6-வது இடத்திலும் தேர்ச்சி பெற்றனர்.

கிளாசிக் நீட் அகாடமியில் ஓராண்டு பயின்றவர்களில், நீட் தேர்வில் 650 மதிப்பெணுக்குக்கு மேல் 6 பேரும், 600 மதிப்பெண் களுக்கு மேல் 22 பேரும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 71 பேரும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 131 பேரும்பெற்று சாதனை படைத்துள்ளனர். இவர்களில் 150 மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. நடப்பு ஆண்டில் பயிற்சி வகுப்புகள் நேற்று (10-ம் தேதி) தொடங்கின. மாணவ, மாணவிகளுக்கு தங்கும் விடுதி வசதியும் உண்டு. மேலும், விவரங்களுக்கு 7867014165 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார். 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்