ராணுவ நிலத்தில் கட்டுமான பணிகளுக்கு அனுமதி - முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் கே.என்.நேருவுக்கு நன்றி : திமுக மாநகரச் செயலாளர் அறிக்கை

By செய்திப்பிரிவு

திமுக மாநகரச் செயலாளரும், முன்னாள் துணை மேயருமான மு.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

திருச்சி மன்னார்புரம் ராணுவ நிலத்தை பெறுவதில் இழுபறி ஏற்பட்டதால் கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக ஜங்ஷன் மேம்பால பணிகள் நிறைவு பெறாமல் இருந்தன. இந்நிலையில் கடந்த மே மாதம் திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்காக முயற்சி மேற்கொண்டார். அதன் ஒருபகுதியாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு தமிழகத்திலுள்ள ராணுவ அதிகாரிகளையும், டெல்லியிலுள்ள ராணுவ உயர் அதிகாரிகளையும் நேரில் சந்தித்து மேம்பால கட்டுமான பணிக்காக ராணுவ நிலத்தை வழங்குமாறு வலியுறுத்தினார்.

இந்நிலையில் சில விதிமுறைகளுடன் மன்னார்புரம் ராணுவ நிலத்தில் மேம்பாலம் கட்டுமானப் பணியைத் தொடங்க ராணுவ அமைச்சகம் நேற்று முன்தினம் அனுமதி அளித்துள்ளது. இந்த மேம்பாலப் பணிகள் நிறைவு பெற்றால் திருச்சி மாவட்ட மக்களுக்கு மட்டுமின்றி, வெளியூரிலிருந்து வரக்கூடிய பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். மாநகரிலும் போக்குவரத்து நெரிசல் குறையும். இதற்காக முயற்சி மேற்கொண்ட முதல்வருக்கும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருக்கும் நன்றி என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்