மழைக் காலம் என்பதால் தூத்துக்குடி மாவட்டத்தில் பேரிடர் மீட்பு படையினர் மற்றும் பேரிடர் மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் இருப்பதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் பேரிடர் கால மீட்பு படையினர் தயாராக உள்ளனர். தேவையான அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன. மாவட்டத்தில் அனைத்து துணை கோட்டங்களிலும் அந்தந்த காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் பேரிடர் மீட்பு பணிக்கென போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. ஆறு, குளங்களில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்றார்.
ஆய்வின் போது ஆயுதப்படை உதவி ஆய்வாளர் மணிகண்டன், மாவட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் கிறிஸ்டி மற்றும் விளாத்திகுளம் துணை கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் சேகர் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago