திருப்பூரில் அங்கன்வாடி மையத்துக்கு அருகே - சேறும், சகதியுமான சாலையால் மாணவர்கள் அவதி :

By செய்திப்பிரிவு

திருப்பூரில் தொடர்ச்சியாக கனமழை பெய்த நிலையில் பல்வேறு பகுதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாகவும், சேறும் சகதியுமாகவும் மாறியுள்ளன. இதனால் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டலம் 19-வது வார்டு குருவாயூரப்பன் நகரில் தார் சாலை சேதமாகி குண்டும் குழியுமாக மாறியதோடு, சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது.

இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறும்போது ‘‘தற்போது பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் என பல்வேறு தரப்பினரும், குருவாயூரப்பன் நகர் சாலையை கடந்து செல்கின்றனர். சாலை குண்டும் குழியுமாகவும், சேறும் சகதியுமாகவும் காட்சியளிப்பதால், அவர்கள் அவதியடைகின்றனர். பள்ளிக்கு செல்லும் அவசர கதியில் மாணவ, மாணவிகளும், இருசக்கர வாகனங்களில் செல்வோரும் தடுமாறி கீழே விழுந்து காயமடைந்த நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளன. இதே பகுதியில் செயல்படும் அங்கன்வாடி மையம் அருகிலேயே குப்பை தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாலையை சீரமைப்பதுடன், குப்பையை அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்