கடந்த ஆட்சியில் இடிந்து விழுந்த - தளவானூர் தடுப்பணையில் மீண்டும் உடைப்பு : உரிய நடவடிக்கை எடுக்க தற்போதைய அரசு தவறியதாக குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

கடந்த ஆட்சியில் இடிந்து விழுந்த தளவானூர் தடுப்பணை மீண்டும் உடைந்துள்ளது. இந்த தடுப்பணையை உரிய முறையில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க தறபோதைய அரசு தவறிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந் துள்ளது.

விழுப்புரம் - கடலூர் மாவட்ட எல்லையான தளவானூர் கிராமத் தில் கடந்த ஆட்சியில் ரூ 25.37 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தடுப்பணை சில மாதங்களிலேயே இடிந்து விழுந்தது. 500 மீட்டர் நீளம் கட்டப்பட வேண்டிய இந்த அணையை 400 மீட்டர் நீளமும், 3.1 மீட்டர் உயரமும் கட்டுவதற்கு மட்டுமே அரசு அனுமதி அளித்தி ருந்ததே இதற்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த அணையை அப்போதைய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார். இந்ததடுப்பணை இடிந்து விழுந்த போது போராட்டத்தில் ஈடுபட்ட இம்மாவட்டத்தைச் சேர்ந்த தற்போதைய அமைச்சர் பொன் முடி. ``சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு மாவட்ட ஆட்சியரில் யாராவது ஒருவர் இங்கு வரவில்லையென்றாலும் இங்கிருந்து செல்ல மாட்டோம். இல்லையெனில், தேசிய நெடுஞ் சாலையில் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றார்.

அணை உடைப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அப்போதைய அமைச்சர் சி.வி.சண்முகம், ``அணை உடையவில்லை. எனதிரிமங்கலம் பகுதியிலுள்ள அணையின் தடுப்புச் சுவர் அருகே சுழல் ஏற்பட்டதால் ஊற்றெடுத்து ஏற்பட்ட பாதிப்பு எனச் சொல் கிறார்கள். அங்கு தடுப்புச்சுவர் கட்டுவதற்கு ரூ. 7 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. உடனடி யாகக் கட்டப்படும்" என்றார். இந்த விவகாரம் தொடர்பாக, அப்போதைய தமிழக அரசு தலைமைப் பொறியாளர் அசோகன் உள்ளிட்ட நான்கு அலுவலர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தது

இந்நிலையில் நேற்று காலை அணையின் இடதுபுறம் மேலும் உடைப்பு ஏற்பட்டு, வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இத்தகவல் அறிந்த அமைச்சர் பொன்முடி, எம்எல்ஏக்கள் லட்சுமணன், புகழேந்தி, ஆட்சியர் மோகன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் கூறியது: இந்த அணைக்கட்டு ஒருஆண்டுக்கு முன் அதிமுக ஆட்சி யில் கட்டப்பட்டது. அப்போது அணைஉடைந்ததால் இதில் தொடர்புடைய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த நடவடிக்கை தொடரும். இதனை சீர் செய்ய திட்டமதிப்பீடு அனுப்பப்பட்டு, ரூ 15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும். பழைய அலுவலர்கள் யாரும் தற்போது விழுப்புரத்தில் பணி யாற்றவில்லை என்றார்.

இது குறித்து அப்பகுதி கிராம விவசாயிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியது:

அணை உடைந்தபோது கட்சித்தொண்டர்களுடன் அங்கு காத்தி ருப்பு ஆர்ப்பாட்டம் நடத்திய பொன்முடி, அமைச்சரான பின்புஇதுவரை இங்கு ஒரு நாள்கூட வரவில்லை. தற்போது வந்துள் ளார்.

மழைக்காலத்திற்கு முன்பேஇந்த அணையின் கரையின் நிலைக்குறித்து ஆய்வு மேற்கொண் டிருந்தால் இப்போது உடைப்பு ஏற்பட்டு இருக்காது.

அணை உடைந்தபோது சரி செய்வதற்காக ஒதுக்குவதாக சொன்ன ரூ 7 கோடி என்ன ஆனது என்று தெரியவில்லை. அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி, இரண்டு மாவட்ட விவசாயிகளைத் திரட்டி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் அறிவித்திருந்தோம். ஆகஸ்ட் 15-ம் தேதி நடந்த பேச்சு வார்த்தையின்போது செப்டம்பர் 15-ம் தேதிக்குள் சரி செய்து தருவதாக பொதுப்பணித்துறையினர் உறுதி அளித்தனர்.

அதனால், மறியல் போராட்டத்தை ஒத்தி வைத்தோம். இப்போது அமைச்சர் சொல்லும் ரூ 15.3 கோடி தொகை சிலமாதங்களுக்கு முன்பு ஒதுக்கப்பட்ட தொகையாகும். மேலும்,இவ்விவகாரம் தொடர்பாக பணியிடமாற்றம் செய்யப்பட்டவர்களில் இருவர் இப்போதும் இப்பகு திகளில் பணியாற்றுகின்றனர் என்று தெரிவித்தனர்.

இது தொடர்பாக தேமுதிக மாவட்ட செயலாளரான எல். வெங்கடேசனிடம் கேட்டபோது, “அதிமுக அரசு தரமில்லாமல் கட்டியதாக குற்றச்சாட்டு எழுந் துள்ளது.

மழைக் காலத்திற்கு முன்பே இந்த தடுப்பணையை தற்போதைய அரசு ஆய்வு செய்து இருக்கலாம். தேமுதிக சார்பில் கூட இது குறித்து ஆட்சியரிடம் மனு அளித்தோம். மக்களின் வரிப்பணத்தை இரண்டு அரசுகளும் வீணாக்குகின்றன” என்று தெரிவித்தார்.

மேலும் இதுகுறித்து மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியனிடம் கேட்டபோது, “ஆட்சிக்கு வந்த தொடக்கத்திலேயே இதன் கரையை பலப்படுத்தி இருக்க வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்