புதுச்சேரி மாநிலம் பூரணாங்குப் பம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (40). மீனவரான இவர், கடலூர் முதுநகர் அருகே சொத்திக் குப்பத்தில் உள்ள தனது மாமனார் வேலாயுதம் வீட்டில் தங்கியிருந்தார். கடந்த 24. 8. 2017 அன்று சுப்ரமணியன், நொச்சிகாட்டை சேர்ந்த பாபு மனைவி மலர்கொடி (35) என்பவருக்கு சொந்தமான முந்திரி தோப்புக்கு சென்று அங்குள்ள ஒரு பூவரச மரத்திலிருந்து கிளைகளை வெட்டியுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சுப்ரமணியன், அருகிலிருந்த கட்டையை எடுத்து மலர்கொடியின் தலையிலும், முகத்திலும் பலமாக தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்து நினைவிழந்த மலர்கொடி கடலூர் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு பின்பு மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த வழக்கு கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி பாலகிருஷ்ணன், குற்றவாளி சுப்ரமணியன் மீதானகுற்றச்சாட்டுகள் நிரூபிக்கப் பட்டதால் அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில், அரசு தரப்பில் வழக்கறிஞர் க. செல்வபிரியா ஆஜரானார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago