வைபர், ஸ்டியரிங் பழுதால் - சிவகங்கை அருகே அரசு பேருந்து கவிழ்ந்து 20 பேர் காயம் :

சிவகங்கை அருகே வைபர், ஸ்டியரிங் பழுதால் அரசு பஸ் கவிழ்ந்ததில் ஓட்டுநர் உட்பட 20 பேர் காயமடைந்தனர்.

திருப்பத்தூரில் இருந்து நேற்று பக லில் 29 பயணிகளுடன் ராமேசுவரத்துக்கு அரசு பேருந்து சென்றது. அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. அத னால் பேருந்தின் முன்பக்க கண்ணாடி யில் விழும் மழைநீரை அகற்ற ஓட்டுநர் வைபரை இயக்கினார். ஆனால் வைபர் சரியாக இயங்கவில்லை. இதனால் 2 முறை பேருந்து நிறுத்தப்பட்டு, மீண்டும் இயக்கப்பட்டது.

இந்நிலையில் சிவகங்கையை அடுத்த சோழபுரம் அருகே சென்றபோது, மீண்டும் வைபர் இயங்கவில்லை. இதனால் கண்ணாடியில் இருந்த மழைநீரால் எதிரே வந்த லாரியை ஓட்டுநரால் கவனிக்க முடியவில்லை.

லாரி பக்கத்தில் வந்ததும், ஓட்டுநர் உடனே பேருந்தை வளைத்தார். இதில் பேருந்து சாலையோரத்தில் இறங்கியது. அப்போது ஸ்டியரிங் இயங்காததால் பேருந்து கவிழ்ந்தது.

இதில் ஓட்டுநர் பிரகாஷ் உட்பட 20 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு பிறகு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து சிவகங்கை டவுன் போலீஸார் விசாரித்து வருகின்றனர். மாவட்டத்தில் திருப்பத்தூர், சிவகங்கை, காரைக்குடி அரசு பணிமனைகளில் பல பேருந்துகள் ஓட்டை உடை சலாக உள்ளன. மெக்கானிக் பற்றாக்குறையால் பழுதுகள் நீக்கப் படுவதில்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதைத் தடுக்க போக்குவரத்து துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE