இந்நிலையில், கடந்த 7-ம் தேதி தினேஷ்பாண்டியின் மொபைல் போனில் பேசிய நபர் வீட்டுக்கு வெளியே வருமாறு கூறினார். ஆனால் அவர் வெளியே செல்லவில்லை. சிறிது நேரத்தில் அவரது வீட்டின் கதவு அருகே பயங்கர வெடிச் சத்தம் கேட்டது. மேலும் கதவருகே நிறுத்தப்பட்டிருந்த அவரது இரு சக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது. இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பியது தெரியவந்தது.
இதுகுறித்து தினேஷ்பாண்டி கொடுத்த புகாரின்பேரில், நாகமலை புதுக்கோட்டை புல்லுாத்தைச் சேர்ந்த சூரியா உள்ளிட்ட இருவர் மீது சமயநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் கேசவ ராமச்சந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கிறார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago