திமுகவினருக்கு அமைச்சர் வேண்டுகோள் :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரான தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் அறிக்கை: தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி 1.11.2021 முதல் 30.11.2021 வரை நடைபெறுகிறது. நவம்பர் 13, 14, 27, 28 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறவுள்ளன.

வாக்காளர்கள் தங்கள் பெயர்களை சேர்க்கவும், நீக்கம் செய்யவும், திருத்தங்கள் செய்யவும் படிவங்களை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் கொடுக்க வேண்டும். மேலும் www.nvsp.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் சேர்ப்பு பணியிலும், சிறப்பு முகாம்களின் போதும் திமுக நிர்வாகிகள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். இந்த பணியின் விவரத்தை மாவட்ட கழகத்துக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்