ராபி பருவ பயிர்களை காப்பீடு செய்ய அறிவுறுத்தல் :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் அறிக்கை: பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் 2021-2022-ம் ஆண்டுக்கான ராபி பருவ பயிர்களை காப்பீடு செய்து பயன்பெறலாம். நடப்பு ஆண்டில் கோவில்பட்டி, கயத்தாறு, விளாத்திகுளம், புதூர், ஓட்டப்பிடாரம், கருங்குளம், தூத்துக்குடி, ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், திருச்செந்தூர் மற்றும் உடன்குடி வட்டாரங்களில் உள்ள 225 குறுவட்டங்களில் நெல் மற்றும் ராபி பருவ இதர பயிர்களான சோளம், கம்பு, மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை, எள், சூரியகாந்தி, பருத்தி, கரும்பு ஆகியவற்றுக்கு அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.

உளுந்து பயிரிடும் விவசாயிகள் இந்த திட்டத்தில் பதிவு செய்ய 15.11.2021 கடைசி நாள் ஆகும். பாசிப்பயறு, மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிரிடும் விவசாயிகள் பதிவு செய்ய 30.11.2021-ம், சோளம் மற்றும் நிலக்கடலை பயிரிடும் விவசாயிகள் பதிவு செய்ய 15.12.2021-ம், கம்பு, எள், சூரியகாந்தி பயிருக்கு பதிவு செய்ய 31.12.2021-ம், நவரை, கோடை பருவத்தில் நெற்பயிரிடும் விவசாயிகள் பதிவு செய்ய 31.01.2022-ம் கடைசிநாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.445, மக்காச்சோளம் பயிருக்கு ரூ.209, சோளம் பயிருக்கு ரூ.110, கம்பு பயிருக்கு ரூ.104, உளுந்து மற்றும் பாசி பயிருக்கு ரூ.199, நிலக்கடலை பயிருக்கு ரூ.252, எள் பயிருக்கு ரூ.107, சூரியகாந்தி பயிருக்கு ரூ.143, பருத்தி பயிருக்கு ரூ.575 காப்பீட்டுக் கட்டணமாக அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்