தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக 737 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ள தாக ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தெரிவித்தார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள் மற்றும் 18 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பான அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் தி.சாரு முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது: வரைவு வாக்குச்சாவடி பட்டியல் 7.11.2021 அன்று பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடி பட்டியல்களில் 3 ஆட்சேபணைகள் மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சேபணைகளை எழுத்து பூர்வமாக வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆட்சேபணைகள் பரிசீலிக்கப்பட்டு, இறுதி வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு மொத்தம் 737 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. அதில் 315 அனைத்து வாக்காளர்களுக்கான வாக்குச்சாவடிகள், 211 ஆண் வாக்காளர்களுக்கான வாக்குச்சாவடிகள், 211 பெண் வாக்காளர்களுக்கான வாக்குச்சாவடிகள் ஆகும் என்றார் ஆட்சியர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago