ஈரோடு மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நாளை தொடங்கி 21 நாட்கள் நடக்கிறது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், பசு மற்றும் எருமைகளுக்கு ஆண்டுக்கு இருமுறை கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நாளை (10-ம் தேதி) தொடங்குகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்கள், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில், நாளை தொடங்கி 21 நாட்களுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடக்கவுள்ளது.
இதற்கென மண்டல இணை இயக்குநர் அலுவலகத்துக்கு 2.80 லட்சம் டோஸ் தடுப்பூசி பெறப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. எனவே, ஈரோடு மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்ப்போர் தடுப்பூசி முகாம்களை பயன்படுத்தி கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago