திருப்பத்தூர் நெடுஞ்சாலை எப் போது சீரமைக்கப்படும் என்பது குறித்து மாநில நெடுஞ்சாலைத் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேவகோட்டையைச் சேர்ந்த பாரதி கண்ணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
தேவகோட்டை நகராட்சிக்கு உட்பட்ட முள்ளிகுண்டு, ஆனந்தா கலைக் கல்லூரி முதல் வடக்கில் தாழையூர் பிரிவு வரையிலும், தெற்கில் ஒத்தக்கடை பாலம் வரையிலும் 6 கி.மீ. தூரம் திருப்பத்தூர் நெடுஞ்சாலை கடந்த 3 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது. 6 மாதங்களுக்கு முன்பு மக்கள் போராட்டத்தால் பேட்ஜ் ஒர்க் மேற்கொள்ளப்பட்டது. தற் போது மீண்டும் இந்தச் சாலை சேதமடைந்துள்ளது.
இதனால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. முள்ளிக்குண்டு முதல் ஒத்தக்கடை வரை 6 கி.மீ. தூர திருப்பத்தூர் நெடுஞ் சாலையை செப்பனிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது தேசிய நெடுஞ் சாலை ஆணையம் தரப்பில், திருப்பத் தூர் சாலை மாநில நெடுஞ் சாலைத் துறை கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. மாநில நெடுஞ்சாலைத் துறை தரப்பில், அந்தச் சாலை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கட்டுப் பாட்டில் இருக்கிறது என தெரிவிக் கப்பட்டது.
இதையடுத்து, திருப்பத்தூர் சாலை யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது? எப்போது சீரமைக்கப் படும்? என்பது குறித்து தமிழக நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவ.12-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago