ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில், 10 கண்மாய்கள், 2 ஊருணிகள் நிரம்பியுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கடந்த 26-ம் தேதி முதல் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள் மற்றும் ஊருணிகள் நிரம்பி வருகின்றன.
மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கீழ் 641 கண்மாய்கள், ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் 1,122 சிறு பாசன கண்மாய்கள், 3,897 ஊருணிகள் என மொத்தம் 5,660 நீர்நிலைகள் உள்ளன. இவற்றில் பொதுப்பணித் துறையின் கீழ் உள்ள 10 கண்மாய்கள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் உள்ள 2 ஊருணிகள் முழுமையாக நிரம்பிவிட்டன. மேலும், 90 கண்மாய்கள், 9 சிறு பாசனக் கண்மாய்கள், 52 ஊருணிகள் 75 சதவீதம் நிரம்பி உள்ளன.
இந்நிலையில் நேற்று ஆட்சியர் சங்கர்லால் குமாவத், ராமநாதபுரம் அருகே சாக்கான்குடி, வன்னிவயல், சித்தூர் ஆகிய கிராமங்களில் உள்ள கண்மாய்கள், ராமநாதபுரம் பெரிய கண்மாய் ஆகியவற்றை ஆய்வுசெய்தார். ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ஷேக் மன்சூர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் எஸ்.மதன சுதாகரன், உதவி செயற்பொறி யாளர் வி.நிறைமதி, வட்டாட் சியர் வி.ரவிச்சந்திரன் உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago