மதுரையில் நாகனாகுளம், புளியங்குளம் உள்ளிட்ட கண்மாய்களை அமைச்சர் பி.மூர்த்தி ஆய்வு செய்தார். ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், பொதுப்பணித் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
மதுரை மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் கண்மாய்களுக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து உள்ளது. பல கண்மாய்கள் நிரம்பியுள்ளன. சில கண்மாய்களுக்கு தண்ணீரை கொண்டுவரும் வரத்து கால்வாய்கள் அடைபட்டுள்ளன. சில இடங்களில் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. இந்த இடங்களை அடையாளம் கண்டு வாய்க்கால்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பறையாத்திகண்மாய், அந்தநேரி, காமாட்சிபுரம் என பல கண்மாய்களுக்கு தண்ணீர் முழுமையாக செல்கிறது. மதுரை மாநகரில் உள்ள கால்வாய்கள் அனைத்தும் ஏற்கெனவே சீரமைக்கப்பட்டுள்ளதால் தண்ணீரை வெளியேற்றுவதில் சிக்கல் இல்லை.
10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியின்போது செய்யாத பணிகளை 6 மாத திமுக ஆட்சியில் செய்துள்ளோம். ஏரி, குளங்களின் நிலையை முன்னரே முதல்வர் நேரடியாக ஆய்வு செய்துள்ளார். மக்களை காக்க நீர்வரத்துக்கு ஏற்ப உரிய நேரத்தில் ஏரிகள் திறக்கப்பட்டுள்ளன. முல்லை பெரியாறு அணை தொடர்பாக உச்ச நீதின்ற உத்தரவுக்கு ஏற்ப செயல்பட முதல்வரும், நீர்வளத் துறை அமைச்சரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago