நீட்’ தேர்வு மதிப்பெண் அச்சத்தில் தற்கொலை செய்த - மாணவரின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி வழங்க அதிமுக வலியுறுத்தல் :

நீட் தேர்வு மதிப்பெண் அச்சத்தில் தலைவாசல் அருகே தற்கொலை செய்து கொண்ட மாணவரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என அதிமுக மற்றும் பாமக-வைச் சேர்ந்த எம்எல்ஏ-க்கள் சேலம் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தலைவாசல் அடுத்த வடகுமரையைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் சுபாஷ் சந்திரபோஸ் (19). இவர் நீட் தேர்வு எழுதிய நிலையில், தேர்வு முடிவு வெளியான நாளில் விஷம் குடித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், உயிரிழந்த மாணவரின் குடும்பத்துக்கு அரசு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கக்கோரி, சேலம் மாவட்ட அதிமுக-வைச் சேர்ந்த எம்எல்ஏ-க்கள் நல்லதம்பி, பாலசுப்ரமணியம், ராஜமுத்து, ஜெயசங்கரன், மணி, சுந்தர்ராஜன் மற்றும் சதாசிவம் (பாமக) உள்ளிட்டோர் சேலம் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பின்னர் அவர்கள் கூறும்போது, “அதிமுக ஆட்சியின்போது, நீட் தேர்வு விவகாரத்தில் உயிரிழந்த மாணவரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார். தற்போது, வடகுமரையைச் சேர்ந்த மாணவர் உயிரிழந்துள்ளார். அவரது குடும்பதினருக்கு தமிழக அரசு ரூ.1 கோடி வ்ழங்க வேண்டும்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்