கனமழை காரணமாக வெள்ள அபாயம் ஏற்பட்டால் அவற்றி லிருந்து பொதுமக்களை மீட்க மத்திய மண்டல காவல்துறையினர் தயாராக இருப்பதாக ஐ.ஜி வே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதுகுறித்து மத்திய மண்டல ஐ.ஜி வே.பாலகிருஷ்ணன் 'இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியதாவது:
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், தற்போது பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் வெள்ள பாதிப்புக்கு வாய்ப்புள்ள இடங்களைக் கண்டறிந்து, அங்குள்ள மக்களை வருவாய் துறை, தீயணைப்புத் துறையினருடன் இணைந்து பாது காப்பாக மீட்கும் பணிகளை மேற் கொள்ள மத்திய மண்டல காவல் துறை தயார் நிலையில் உள்ளது.
ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் உடைப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகள், நீர் வழிந் தோடக்கூடிய பகுதிகளில் உள்ளூர் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆபத்தான இடங்களில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு, அதுதொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. சாலையில் மரங்கள் சாய்ந்து விழுந்தால், அவற்றை உடனடியாக அப் புறப்படுத்துவதற்காக மரம் அறுக்கும் கருவிகள், பொக் லைன் இயந்திரங்கள் உள்ளிட்ட வையுடன் ஆங்காங்கே காவல் துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.
மேலும் காவல்துறையிலுள்ள, மாநில பேரிடர் மீட்பு படையினரும் தயாராக உள்ளனர். மயிலாடு துறை மாவட்டத்தில் அதிகளவில் பாதிப்பு நேரிட வாய்ப்புள்ளதால், அங்கு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago