திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது.
ஆட்சியர் சு.சிவராசு தலைமை வகித்து பொதுமக் களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டார். அப்போது புள்ளம்பாடியி லுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக பின்பகுதியிலுள்ள புறம்போக்கு நிலத்தில் வசித்து வரக்கூடிய இருளர் இனத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் அளித்த மனுவில், ‘சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த இடத்தில் வசித்து வருகிறோம்.
தற்போது அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலைய விரிவாக்கத்துக்கு நாங்கள் வசிக்கும் நிலத்தை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நாங்கள் வசிக்கும் இடத்துக்கு பட்டா வழங்க வேண்டும். இல்லாவிட்டால் அப்பகுதியில் மாற்று இடமோ அல்லது வீடோ வழங்க வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதேபோல பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் 152 மனுக்கள் அளிக்கப்பட்டன. மழை காரணமாக வழக்கத்தைவிட, குறைவான நபர்களே மனு அளிக்க வந்திருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago