கல்வி, தொழில் தொடர்புகளை வலுப்படுத்த - தென்மண்டல மின்பகிர்வு மையம்- என்ஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம் :

By செய்திப்பிரிவு

கல்வி மற்றும் தொழில் தொடர் புகளை வலுப்படுத்த பெங்க ரூவில் உள்ள தென்மண்டல மின்பகிர்வு மையம் மற்றும் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது.

திருச்சி என்ஐடியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் என்ஐடி இயக்குநர் மினி ஷாஜி தாமஸ், தென்மண்டல மின்பகிர்வு மைய உதவி மேலாளர் (மனிதவளம்) ஜெரோம் அமிர்தராஜ் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந் தத்தின் மூலம் மின் பொறியியல் துறையில் பணியாற்றும் ஆசிரியர் கள் மற்றும் மாணவர்களுக்கு நேரடி அனுபவத்தை அதிகரிக்க முடியும். இந்திய மின் சட்டத்தை நிர்வகித்தல், இயக்குதல் ஆகிய வற்றின் செயல்திறனை மேம்படுத் தும். நாட்டின் மின்சாரத்துறை தொடர்பான பிரச்சினைகள் குறித்த ஆராய்ச்சியை ஊக்குவிப்பது, கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம் பாட்டுத் திட்டங்களை மேற்கொள் வது, ஆராய்ச்சி கட்டுரை வெளி யீடுகளை ஊக்குவித்தல் உள் ளிட்ட பல்வேறு அம்சங்களை இருநிறுவனங்களும் பரிமாறிக் கொள்ளும்.

மூன்று ஆண்டுகளுக்கு செல்லு படியாகத் தக்க இந்த புரிந்து ணர்வு ஒப்பந்தத்தை செயல் படுத்துவதற்கு என்ஐடி பேராசிரியர் என்.குமரேசன் என்ஐடியின் ஒருங்கிணைப்பாளராகவும், தென்மண்டல மின்பகிர்வு மைய தலைமை பொது மேலாளர் எஸ்.பி. குமார் இந்த மையத்தின் ஒருங் கிணைப்பாளராகவும் செயல் படுவர்.

இந்த நிகழ்வில், என்ஐடி முதன் மையர் (ஆராய்ச்சி மற்றும் ஆலோ சனை) எஸ்.முத்துக்குமரன், மின் மற்றும் மின்னணு பொறியியல் துறையின் தலைவர் வி.சங்கர நாராயணன், பேராசிரியர்கள் கும ரேசன், எம்.பி.செல்வன், எம். வெங் கடகிருத்திகா, செந்தில் அரசு உள் ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்