வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள்: அமைச்சர் ஆய்வு :

By செய்திப்பிரிவு

வடகிழக்கு பருமழையை முன்னிட்டு அரியலூர் மாவட் டத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஜெயங்கொண்டத்தை அடுத்த குருவாலப்பர் கோவில் கிராமத்தில் உள்ள பொன்னேரியில் நடைபெற்று வரும் மதகுகள் அமைக்கும் பணிகளை பார்வையிட்ட அவர், பணிகளை விரைந்து முடிக்கவும், பணிகள் முடிந்த பகுதிகளின் கரைகளின் உறுதித்தன்மையை உறுதி செய்யவும் பொதுப்பணித் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, மீன்சுருட்டி சந்தை பகுதியில் கும்பகோணம்- சென்னை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியின் காரணமாக மழைநீர் வெளியேற போதுமான வசதி இல்லாததால், மழைநீர் தேங்கியிருப்பதை பார்வையிட்ட அமைச்சர், மழைநீர் வடியும் வகையில் சாலையின் இருபுறங்களிலும் மழைநீர் வடிகால் அமைக்கவும், சாலை விரிவாக்கப் பணியை விரைந்து மேற்கொள்ளவும் நெடுஞ்சாலைத்துறை அலுவ லர்களை அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி, எம்எல்ஏ க.சொ.க.கண்ணன், கோட்டாட்சியர் அமர்நாத், உதவி செயற்பொறியாளர் சாந்தி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்