அண்ணாமலையார் கோயிலில் நாளை - கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் : பக்தர்களுக்கு அனுமதி கிடையாது

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் நாளை (10-ம் தேதி) காலை கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் நடைபெற உள்ளது.

தி.மலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் நேற்றிரவு தொடங்கியது. தி.மலை சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோயிலில், அம்மனின் உற்சவம் நடைபெற்றது.

இதையடுத்து, 2-வது நாளான நேற்றிரவு பிடாரி அம்மன் உற்சவம் நடைபெற்றது. அண்ணாமலையார் கோயிலில் நடை பெற்ற உற்சவத்தில், சிறப்பு அலங் காரத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பிடாரி அம்மன் அருள் பாலித்தார். இதையடுத்து, வெள்ளி மூஷீக வாகனத்தில் விநாயகர் உற்சவமும் மற்றும் ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் உற்சவ மும் இன்று நடைபெற உள்ளது.

இதைத்தொடர்ந்து, அண்ணா மலையார் கோயில் மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்க கொடி மரத்தில் நாளை (10-ம் தேதி) காலை 6.30 மணி முதல் 7.25 மணிக்குள் விருச்சிக லக்கி னத்தில் கொடியேற்றம் நடைபெற உள்ளது. கொடியேற்றம் நடைபெற உள்ளதால், கரோனா தொற்று பரவலை காரணமாக கூறி, நாளை (10-ம் தேதி) காலை 6 மணி முதல் 9 மணி வரை, அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர் களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. கொடியேற்றத்தை அடுத்து, கோயில் உள்ள 5-ம் பிரகாரத்தில் பஞ்ச மூர்த்திகளின் உற்சவம் 10 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 19-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு மூலவர் சன்னதியில் பரணி தீபமும் மற்றும் மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. பிரம்மத் தீர்த்தக்குளத்தில் 3 நாட்களுக்கு தெப்பல் உற்சவம் நடைபெற உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்