வாணியம்பாடி வசீம்அக்ரம் கொலை வழக்கில் - கூலிப்படையை சேர்ந்தவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பதிவு :

By செய்திப்பிரிவு

வாணியம்பாடி வசீம்அக்ரம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள கூலிப்படை கும்பலைச் சேர்ந்த டில்லிகுமார் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவாநகரைச் சேர்ந்த மஜக முன்னாள் நிர்வாகி வசீம்அக்ரம்(42). இவர், கடந்த செப்டம்பர் மாதம் 10-ம் தேதி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு வேலூர் உள்ளிட்ட பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வசீம்அக்ரம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் மண்ணி வாக்கம் பகுதியைச் சேர்ந்த டில்லிகுமார் என்பவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் குற்றவழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பதிவு செய்ய வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹாவுக்கு பரிந்துரை செய்தார்.

உத்தரவு நகல் அனுப்பி வைப்பு

இதைத்தொடர்ந்து, ஆட்சியர் அளித்த உத்தரவின்பேரில் வாணியம்பாடி நகர காவல் துறையினர் கூலிப்படையைச் சேர்ந்த டில்லிகுமார் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பதிவு செய்து அதற்கான நகலை வேலூர் மத்திய ஆண்கள் சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்