ஈரோட்டில் வரத்து குறைவால் மீன் விலை அதிகரிப்பு :

By செய்திப்பிரிவு

வரத்து குறைவால் ஈரோட்டில் மீன்கள் விலை நேற்று அதிகரித்தது.

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதனால், அவற்றின் விலை அதிகரித்துள்ளது. இதேபோல் தற்போது இறைச்சி விலையும் அதிகரித்துள்ளது. வார விடுமுறைநாளான நேற்று ஈரோட்டில் இறைச்சிக் கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

ஈரோடு ஸ்டோனி பாலம் அருகே உள்ள மீன் சந்தைக்கு, தொடர்மழையின் காரணமாக மீன்கள் வரத்து குறைவாக இருந்தது. கடந்த வாரம் 2500 கிலோ மீன்கள் வரத்து இருந்த நிலையில், இந்த வாரம் இது 1000 கிலோவாக குறைந்தது. இதனால் அனைத்து வகையான மீன்களின் விலையும் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.750-க்கு விற்பனையான வஞ்சிரம் மீன், நேற்று ரூ.900-க்கு விற்பனையானது. இதேபோல் இறால் விலை கிலோவுக்கு ரூ.100 அதிகரித்து ரூ.600-க்கு விற்பனையானது. நண்டு கிலோ ரூ.500, சீரா, கடல்பாறை, விலா மீன்கள் கிலோ ரூ.450, சங்கரா ரூ.350, மத்தி ரூ.200, அயிலை ரூ.275, ரோகு, கட்லா தலா ரூ.170-க்குவிற்பனையானது இதைப்போல் கருங்கல்பாளையம் காவிரி சாலை மீன் சந்தை, கோபி, அந்தியூர், பெருந்துறை, சத்தியமங்கலம் உள்ளிட்ட இடங்களிலும் மீன் விலை அதிகரித்து காணப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்