கடலூர் கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் வாக்காளர் சேர்க்கும் பணியில் தீவிரம் காட்ட வேண்டும் என்று கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், வேளாண் அமைச்சரும், திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி திமுக நிர்வாகிகள் வாக்காளர் சேர்க்கும் பணியில் தீவிரம் காட்ட வேண்டும். வருகிற 1.1.2022-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும், 2021ம் ஆண்டு சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்திடும் பணி 01.11.2021 முதல் 30.11.2021 வரை மனு அளித்திட தேர்தல் ஆணையம் அவகாசம் கொடுத்துள்ளது.
மேலும் வரும் 13.11.2021, 14.11.2021 மற்றும் 27.11.2021, 28.11.2021 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறவுள்ளன. மேற்கண்ட நாட்களில் நடைபெறும் வாக்காளர் சேர்ப்பு பணியிலும் மற்றும் சிறப்பு முகாம்களிலும் திமுக நிர்வாகிகள்,தொண்டர்கள் உள்ளிட்ட அனைத்து பொறுப்பாளர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் பகுதிகளில் வாக்காளர் சேர்க்கும் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இந்த பணியின் விவரத்தினை மாவட்ட திமுக நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago