திண்டுக்கல் மாவட்டத்தில் - தொடர் மழையால் நிரம்பி வழியும் அணைகள் :

திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழையால் அணைகள் நிரம்பி வழிகின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங் கியது முதல் தொடர்ந்து தினமும் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக வரதமாநதி அணை, மருதாநதி அணை, குதிரையாறு அணை ஆகியன நிரம்பி வழிகின்றன.

பாலாறு பொருந்தலாறு அணை, பரப்பலாறு அணை ஆகியன சில தினங்களில் நிரம்பிவிடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படுகிறது.

பருவமழை தொடக்கத்திலேயே அணைகள் நிரம்பியதால் இந்த ஆண்டு செய்துள்ள சாகுபடிக்கு அறுவடை வரை தேவையான தண்ணீர் கிடைக்கும் என்று விவசா யிகள் நம்பிக்கையில் உள்ளனர்.

மேலும், குடிநீர் பிரச்சினை இருக்காது என பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

அணைகளின் நீர்மட்டம் விவரம்: பாலாறு பொருந்தலாறு அணையின் நீர்மட்டம் 63.06 அடி (மொத்தம் 65 அடி) வரதமாநதி அணை- 66.47 அடி (மொத்தம் 64.47 அடி), குதிரையாறு அணை- 77.01 அடி (மொத்தம் 79.99 அடி),

மருதாநதி அணை- 71 அடி (மொத்தம் 71 அடி), பரப்பலாறு அணை- 86.26 அடி (மொத்தம் 90 அடி), குடகனாறு அணை-12.01 அடி (மொத்தம் 27.07 அடி).

நிரம்பும் நிலையில் உள்ள அணைகளுக்கு வரும் தண்ணீர் பாதுகாப்புக் கருதி வெளியேற்றப்படுகிறது. மருதாநதி அணைக்கு வரும் 500 கன அடி நீரும் வெளியேற்றப்படுவதால் மருதா நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடு கிறது. இதனால் கரையோரமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச்செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்