கம்யூனிஸ்ட் சார்பில் : புரட்சி தின கொடியேற்று விழா :

By செய்திப்பிரிவு

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நவம்பர் 7 புரட்சி தின கொடியேற்று விழா நடைபெற்றது.

ராஜபாளையம் அருகே சேத்தூர் பேரூராட்சியில் இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலாளர் ராஜா தலைமையிலும், செட்டியார்பட்டி பேரூராட்சியில் கட்சி நிர்வாகி அய்யணன் தலைமையிலும் மாவட்டச் செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான லிங்கம் கொடியேற்றினார்.

இதேபோன்று, விருதுநகரில் மார்க்சிஸ்ட் மாவட்டக்குழு அலுவலகத்தில் செங்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கொடியேற்றி வைத்தார். மாவட்டச் செயலாளர் கே.அர்ஜுனன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்