வடிகால் இல்லாததால் சாலையில் ஓடும் வெள்ளநீர் - சிவகங்கையில் மழை நீரில் மூழ்கிய 200 வீடுகள் :

சிவகங்கையில் மழைநீரில் 200 வீடுகள் மூழ்கின. வடிகால் வசதி இல்லாததால் கடந்த 4 நாட்களாக வெள்ளநீர் சாலையில் ஓடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கினர்.

சிவகங்கை நகராட்சியில் சாஸ்திரி நகர், ராமசாமி நகர், மீனாட்சி நகர் உள்ளிட்ட பகுதி களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. ஆனால் இப்பகுதிகளில் மழைநீர் வெளி யேற வடிகால் வசதியும் கழிவுநீர் வெளியற கால்வாய் வசதியும் இல்லை.

மேலும் இப்பகுதி கொட்டகுடி கண்மாய் அருகே அமைந்துள்ளது. சமீபத்தில் பெய்த தொடர் மழையால் இப்பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட வீடுகள் மழைநீரில் மூழ்கியுள்ளன. மேலும் சாலையில் 4 நாட்களாக வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். மழைநீருடன் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.

நோய் பரவும் அபாயம்

இது குறித்து ராமசாமி நகரைச் சேர்ந்த உமாமகேஸ்வரி கூறியதாவது:

எங்கள் பகுதியில் சாலைகளை அமைத்த நகராட்சி அதிகாரிகள், வடிகால்களை ஏற்படுத்தவில்லை. இதனால் தண்ணீர் வெளியேற வழியின்றி வீடுகளைச் சூழ்ந்துள்ளது. சுற்றுச்சுவர் இல்லாத வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துவிட்டது.

இதனால் பலர் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியேறி விட்டனர். சிலர் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் உள்ளனர். நோய் பரவும் அபாயம் உள்ளதால் மழைநீரை வெளியேற்ற ஆட்சியர் நடவடிக் கை எடுக்க வேண்டும், என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE