நெடுசாலை முதல் நாச்சிக்குப்பம் வரையான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது நெடுஞ்சாலை கிராமம். இக்கிராமத்தில் இருந்து வேப்பனப்பள்ளி, நாச்சிகுப்பம் செல்லும் தார் சாலை அமைந்துள்ளது. இச்சாலை வழியாக வேப்பனப்பள்ளி சுற்றுவட்டாரக் கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளைபொருட்களை குருபரப்பள்ளிக்கும், சூளகிரிக்கும் விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட தார்சாலை போதிய பராமரிப்பு இல்லாததால் பல்வேறு இடங்களில் குண்டும், குழியுமாக மாறியது. இதேபோல, சாலையின் இருபுறமும் முட்புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. குறிப்பாக நெடுசாலை முதல் கத்தரிப்பள்ளி கிராமம் வரை சாலை பல்வேறு இடங்களில் பள்ளமாக மாறியதால், தற்போது பெய்த மழைக்கு தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறி உள்ளது.
இச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயங்களுடன் செல்லும் நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், தரமற்ற நிலையில் உள்ள இச்சாலையை சீரமைக்க வேண்டுமென என கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago