போலி விதைகளால் காய்க்காத அரசாணி : தாராபுரம் பகுதி விவசாயிகள் கவலை :

உடுமலை: திருப்பூர் மாவட்டம், உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம், தாராபுரம், மூலனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தென்னை, மக்காச்சோளம், காய்கறிகள், பயறு வகை பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் தாராபுரம் பகுதிகளில் அரசாணி சாகுபடி செய்த விவசாயிகள் பலரும் போலி விதைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து தாராபுரம் வட்டம், சின்னக்காம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட மணங்காட்டு புதூரை சேர்ந்த விவசாயி நல்லசிவம் என்பவர், ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது ‘‘கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன் தனியார் விதை விற்பனை நிறுவனத்தில் அரசாணி விதைகளை வாங்கி நடவு செய்தேன். தளதளவென கொடி படர்ந்தது. பூக்கள் பூத்தன. ஆனால் ஒரு பிஞ்சுகூட காய்க்கவில்லை. இதனால் வருமானம் பாதிக்கப்பட்டு, கடன் சுமையில் தவிக்கிறேன். என்னைப்போல பல விவசாயிகள் போலி விதைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தொடர்புடைய தனியார் விதை விற்பனை நிறுவனம் மூலம் உரிய இழப்பீடு பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்