முத்தூரில் ரூ.92,000-க்கு கொப்பரை ஏலம் :

வெள்ளகோவிலை அடுத்த முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் மற்றும் கொப்பரை ஏலம் நேற்று நடைபெற்றது.

முத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 9 பேர், விற்பனைக்காக 991 தேங்காய்களை கொண்டு வந்தனர்.

முதல் தரம் ஒரு கிலோ ரூ.28-க்கும், இரண்டாம் தரம் ரூ.27-க்கும்,சராசரியாக ரூ.27.50-க்கும் ஏலம்போனது. மொத்தம் 400 கிலோ தேங்காய்கள், ரூ.11 ஆயிரத்துக்கு விற்பனையாகின. இதேபோல நடைபெற்ற கொப்பரை ஏலத்துக்கு, 19 விவசாயிகள்1,033 கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அதிகபட்சமாகஒரு கிலோ ரூ.101.10-க்கும், குறைந்த பட்சமாக ரூ.76.70-க்கும் ஏலம் போனது. மொத்தம் 1,033 கிலோ கொப்பரை ரூ.92,000-க்கு விற்பனையானதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ரங்கன்தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்