ரூ.25 கோடி மதிப்பீட்டில் உருவாகிறது - திண்டிவனத்தில் புதிய பேருந்து நிலையம் : அமைச்சர்கள் கே.என்.நேரு, க.பொன்முடி, கே.எஸ்.மஸ்தான் ஆய்வு

திண்டிவனத்தில் ரூ. 25 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலை யத்தை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை மார்க்கத்தில் உள்ள திண்டிவனத்தில் பேருந்து நிலையம் அமைக்க அப்பகுதி மக்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகஅரசு ரூ.25 கோடி மதிப்பீட்டில் புதியபேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதற்கான வரைபடம் தயாரிக்கப் பட்டுள்ளது.

புதிய பேருந்து நிலையம் அமையவுள்ள காவேரிப்பாக்கம் பகு தியை நகராட்சி நிர்வாகம், நகர்ப் பகுதி மற்றும் குடிநீர் வழங்கல்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று நேரில் பார்வையிட்டார். உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் உடனிருந்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “திண்டிவனம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்களின் 10 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றிடும் பொருட்டு புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப் பட்டு ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தேர்வு செய்யப்பட் டுள்ள இப்பகுதியில், ரூ.25 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ளது.

உள்ளுர் மற்றும் வெளியூர் பேருந்துகளுக்கு தனி நிறுத்தங்கள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்கள், கழிவறை வசதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளுடன் இந்த புதிய பேருந்து நிலையம் அமையும்” என்று தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாதாமற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்