மோசமான நிலையில் பிரம்மர் சிலை சதுக்கம் : புதுச்சேரி அரசு சீராக்குமா?

மோசமான நிலையில் புதர்மண்டி கிடக்கும் வரலாற்று புகழ்மிக்க பிரம்மர் சிலை சதுக்கத்தை புதுச்சேரி அரசு சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

புதுச்சேரியில் பழங்காலத்தில் அரிக்கன்மேடு பகுதி மிகப்பெரிய வணிக பகுதியாக விளங்கியது. அரிக்கன்மேட்டிலிருந்து வர்த்தகத்துக்கு வரும் மக்கள் தங்களது பொருட்களை தலைச் சுமையாக தூக்கிக் கொண்டு 3 கி.மீட்டர் தொலைவுக்கு நகர பகுதிக்கு வருவார்கள். தலையில் பொருட்களை தூக்கி வரும் அவர்கள் வீராம்பட்டினம் சந்திப்பில் இளைப்பார தண்ணீர் வசதியுடன் ஒரு சதுக்கத்தை ரோமானியர்கள் செய்திருந்தனர்.

பிற்காலத்தில் தொழிலாளர்கள் ஓய்வெடுத்து தண்ணீர் குடித்து செல்வதற்கு ஒரு நினைவிடமாக அமைக்கப்பட்டது. இங்கிருந்த பிரம்மர் சிலையால்இவ்விடம் பிரம்மர் சிலை சதுக்கமாக மாறியது. இங்கு சிறிய பூங்காவை பொதுப்பணித்துறை சீரமைத்துஅரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்திடம் ஒப்படைத்தது. 17 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சதுக்கம் பயனற்று புதர்மண்டி கிடக்கிறது. இவ்விடத்தை அழகுபடுத்தி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், “அரியாங்குப்பத்தின் அடையாளமாக இருக்கும் பிரம்மன் சதுக்கம் 1987-ம் ஆண்டு முதலில் சீரமைக் கப்பட்டது.

அதன்பிறகு 2005-ம் ஆண்டு இது புதுப்பிக் கப்பட்டது. 2005-ம் ஆண்டுக்கு பிறகு இந்த இடம் சீரமைக்கப்படவில்லை. மோசமாகவே உள்ளது” என்று குறிப்பிட்டனர்.

தொகுதி எம்எல்ஏ பாஸ்கர் இப்பகுதியை பார்வையிட்ட பிறகு கூறுகையில், “இப்பகுதியை உடனே சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன்” என்று குறிப்பிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்