மதுரை மாநகராட்சி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி மண்டலம்-2 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் வரும் 9-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாநகராட்சி ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன் தலைமையில் நடக்கிறது.
இந்த குறைதீர்க்கும் முகாமில் மண்டலம்-2 பகுதிக்கு உட்பட்ட பொதுமக்கள், குடிநீர், பாதாளச் சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்டவை தொடர்பான கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago