எப்போது வரை புதிய வாக்காளர் சேர்ப்பு? : சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தகவல்

By செய்திப்பிரிவு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் வரை புதிய வாக்காளர்களை சேர்க்கலாம் என சிவகங்கை ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது. ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) லோகன், வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

ஆட்சியர் பேசுகையில், சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை ஆகிய 3 நகராட்சிகளில் உள்ள 90 வார்டுகளில் 196 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் 11 பேரூராட்சிகளில் 258 வார்டுகளில் 401 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் நவ.25-ம் தேதி வெளியிடப்படுகிறது. அதைத் தொடர்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் வரை புதிய வாக்காளர்களைச் சேர்க்கலாம். பெயர்களை நீக்கலாம். திருத்தம் செய்யலாம். இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்