சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த - கமலாலயக் குளத்தில்வல்லுநர் குழு ஆய்வு :

திருவாரூர் தியாகராஜர் கோயிலின் கமலாலயக் குளத்தின் தென்கரை பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் கடந்த அக்.24-ம் தேதி கனமழையின்போது 100 மீட்டர் நீளத்துக்கு இடிந்து விழுந்தது. இதை உடனடியாக ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் பார்வையிட்டார்.

தொடர்ந்து, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பார்வையிட்டு, “சுற்றுச்சுவரை கட்டுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

இந்நிலையில், இந்தக் குளத்தின் கரையில் உள்ள சுற்றுச்சுவரை புதுப்பித்து கட்டுவது தொடர்பாக, திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக பேராசிரியர்கள் முத்துக்குமரன், சரவணன் ஆகியோர் நேற்று கமலாலயக் குளத்தின் கரைகளை ஆய்வு செய்தனர். அவர்களுடன், மாவட்ட வருவாய் ஆய்வாளர் சிதம்பரம், கோட்டாட்சியர் பாலச்சந்திரன், பொதுப்பணித் துறை கட்டிட கட்டுமானப் பிரிவு செயற்பொறியாளர் மோகனசுந்தரம், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் கவிதா ஆகியோரும் இருந்தனர்.

ஆய்வுக்குப் பின்னர், பேராசிரியர் முத்துக்குமரன் கூறியது:

கமலாலயக் குளத்தில் முதல் கட்ட ஆய்வு நடைபெற்றுள்ளது. அதன்படி, மேல்கரை வலுவாகவும், மற்ற கரைகள் வலுவிழந்தும் உள்ளன.

20 நாட்கள் முதல் ஒரு மாதத்துக்குள் ஆய்வறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்படும். தென்கரை சுற்றுச்சுவர் உடைவதற்கு கனமழை மட்டுமின்றி, கரையின் வழியாக கனரக வாகனங்கள் அதிகளவு சென்று வந்ததும் காரணமாகும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்