திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா நடைபெற்று வருகிறது. ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் நேற்று திருச்செந்தூரில் ஆய்வு செய்தனர்.
பின்னர் ஆட்சியர் கூறியதாவது: கரோனா தடுப்பு நடவடிக்கையாக கந்தசஷ்டி திருவிழாவில் சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் நிகழ்ச்சிகளில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கோயில் மூலம் வழங்கப்படும் அன்னதானத்தில் தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால், தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் அன்னதானத்தில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 500 பக்தர்கள் அமர்ந்து சாப்பிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போலவே சூரசம்ஹாரம் நிகழ்ச்சியானது கோயில் கடற்கரை பகுதியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக ரூ.100, ரூ.250 கட்டண தரிசன டிக்கெட் பெற கூடுதல் கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.
எஸ்.பி. ஜெயக்குமார் கூறும்போது, “ திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சூரசம்ஹார நிகழ்ச்சியில் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கோயில்கடற்கரையில் செட் அமைத்து நடத்தப்படும். திருச்செந்தூர் வரும் வழிகளில் 15 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும்” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago