தம்பியை கொலை செய்த அண்ணன் உட்பட 5 பேர் கைது :

By செய்திப்பிரிவு

திருப்பத்தூரில் சொத்து தகராறில் தம்பியை அடித்து கொலை செய்த வழக்கில் அண்ணன் உட்பட 5 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

திருப்பத்துார் சிவனார் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (49). அதிமுக பிரமுகரான இவர், அதே பகுதியில் ஹார்டுவேர் கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை. இவரது சகோதரர் ரவீந்திரன் (54), என்பவருக்கும் பாஸ்கரனுக்கும் இடையில் கடந்த சில ஆண்டுகளாக சொத்து தகராறு இருந்து வந்தது. இது தொடர்பாக இருவருக்கும் இடையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த ரவீந்திரன் மற்றும் அவரது மகன்கள் கிருஷ்ணகுமார் (24), லால் விஷ்ணு (19), உறவினர்கள் ஜெயவேல்(64), வான்முகிலன் (25) ஆகியோர் ஒன்று சேர்ந்து பாஸ்கரனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், பாஸ்கரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த தகவலை அடுத்து திருப்பத்தூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் ஹேமாவதி மற்றும் காவலர்கள் விரைந்து சென்று பாஸ்கரனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாஸ்கரனின் சகோதரி லதா (40) என்பவர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து ரவீந்திரன் உட்பட 5 பேரையும் நேற்று கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்