உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம், துரிஞ்சாபுரம், சேத்துப்பட்டு, கீழ்பென்னாத்தூர், வந்தவாசி மற்றும் தெள்ளாறு வட்டங்களில் உள்ள 308 ஊராட்சிகளில் தனி நபர் மற்றும் குழு தொழில் முனைவுகள் ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்காக தொழில் முனைவோர்களுக்கு புதிய தொழில் தொடங்கவும், ஏற்கெனவே செய்து வரும் தொழிலை விரிவாக்கம் செய்யவும், வணிகத் திட்டங்கள் மற்றும் தொழில் ரீதியில் ஆலோசனைகளை வழங்க ‘ஓரிட சேவை மையம்’ ஏற்படுத்தப்பட உள்ளது.
ஓரிட சேவை மையத்துக்கு தொழில் மேம்பாட்டு அலுவலர் ஒருவர் மற்றும் தொழில் நிதி அலுவலர் ஒருவர் என இரண்டு பேர் ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளனர். முதுகலைப்பட்டம் பயின்ற, கணினி திறன் மற்றும் ஊரக தொழில் முனைவுகள் குறித்து நன்கு அறிந்த, 40 வயதுக்கு உட்பட்ட தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
www.tnrtp.org என்ற இணையதள முகவரியில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணம் இல்லை.
மாத ஊதியம் ரூ.25 ஆயிரம் மற்றும் பயணப்படி வழங்கப்படும். அனுபவம் உள்ள பெண்கள் மற்றும் சமூக ரீதியாக பின் தங்கியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, மாவட்ட செயல் அலுவலர், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம், எண் – 1 காந்திநகர், 4-வது தெரு, திருவண்ணாமலை என்ற முகவரிக்கு வரும் 15-ம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிடையாக அல்லது பதிவு அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கலாம்” என தி.மலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago