மாநில அளவில் நேற்று ஒரே நாளில் - ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு தடுப்பூசி செலுத்தியதில் ஐந்தாமிடம் :

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் அதிக எண்ணிக்கை கரோனா தடுப்பூசி செலுத்தியதில் மாநில அளவில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தடுப்பூசிசெலுத்துவதில் 6 கோடி எண்ணிக்கையை அடையும் இலக்கை நோக்கி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, மாவட்டங்களில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் நேற்று ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தியதில் மாநில அளவில் கடலூர், தி.மலை, சிவகங்கை, மதுரை மாவட்டங் களுக்கு அடுத்ததாக ராணிப்பேட்டை மாவட்டம் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது. மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 11,751 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலையில் நேற்று வரை 7.45 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், முதல் டோஸ் தடுப்பூசியை 5.61 லட்சம் பேரும், இரண்டாம் டோஸ் தடுப்பூசியை 1.83 லட்சம் பேரும் போட்டுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சாத்தம்பாக்கம், குடிமல்லூர் பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்