ஏலகிரி மலையில் உள்ள தங்கும் விடுதிகளில் 50-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் வார இறுதி நாட்களில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
எஸ்.பி., உத்தரவு
இதை பயன்படுத்தி பல தங்கும் விடுதிகளில் மசாஜ் சென்டர் பெயர்களில் சட்ட விரோத செயல்கள் நடைபெறுவதாக புகார் கூறப்படுகிறது.இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தலிங்கம் தலைமையில் 6 காவல் ஆய்வாளர்கள் உட்பட 50 பேர் அடங்கிய குழுவினர் ஏலகிரி மலையில் உள்ள தங்கும் விடுதிகளில் நேற்று இரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago