கொப்பரை தேங்காய் உற்பத்தி அதிகரிப்பால் விலை வீழ்ச்சி : கொள்முதல் நிலையம் அமைக்க தென்னை விவசாயிகள் எதிர்பார்ப்பு

By எஸ்.கே.ரமேஷ்

போச்சம்பள்ளியில் கொப்பரை கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டுமென தென்னை விவசாயி கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் உள்ள அரசம்பட்டி, பாரூர், மஞ்சமேடு, புங்கம்பட்டி, கீழ்குப்பம், போச்சம்பள்ளி, நெடுங்கல், அகரம், மருதேரி, செல்லம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 36 ஆயிரம் ஏக்கரில் 15 லட்சம் தென்னை மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் போச்சம்பள்ளி பகுதிகளில் உள்ள தென்னை விவசாயிகள் தேங்காய்களை வியாபாரிகளிடம் விற்பனை செய்யாமல் அவர்களே தேங்காய்களை உடைத்து வெயிலில் காயவைத்து கொப்பரை தேங்காயை தரம் பிரித்து ஈரோடு, பெருந்துறை, காங்கேயம் உள்ளிட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். தற்போது கேரளாவில் தொடர் மழை எதிரொலியாக தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. எண்ணெய் மார்க்கெட் சரிவு காரணமாக கொப்பரை தேங்காய் விலை உயரவில்லை.

கடந்த வாரத்தை விட இந்த வாரம் கொப்பரை தேங்காய் வரத்து அதிகரித்து வருவதால், அதன் விலை சரிவடைந்துள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன்னர், முதல் ரகம் ரூ.120-க்கு விற்பனையானது. இந்த வாரம் விலை சரிந்து ஒரு கிலோ முதல் ரகம் ரூ.85-லிருந்து 90 வரையும், 2-வது ரகம் ரூ.60 முதல் ரூ.75 வரை மட்டுமே விற்கப்படுவதாக வேதனையுடன் தெரிவித்தனர் தென்னை விவசாயிகள்.

இதுதொடர்பாக அவர்கள் மேலும் கூறும்போது, தேங் காயை உடைத்து உலர்த்தி பதப்படுத் தினால், கொப்பரைத் தேங்காய் கிடைத்து விடும். இதன் மூலம் கூடுதல் வருவாய் மற்றும் வேலை வாய்ப்பும் கிடைக்கிறது.

இங்குள்ள தென்னை விவசாயிகளின் நலன் கருதி காவேரிப்பட்டணத்தில் அரசு கொப்பரைத் தேங்காய் கொள் முதல் மையம் தொடங்கப்பட்டு எவ்வித பயனும் இல்லை. போச்சம்பள்ளி பகுதியில் கொப்பரை கொள்முதல் நிலையம் இல்லை. இதன் காரணமாக கொப்பரை வியாபாரிகள் ஈரோடு, பெருந்துறை, காங்கேயம் போன்ற இடங்களுக்கு வாகனம் மூலம் கொப்பரையை அனுப்பி வைப்பதினால் கூடுதல் செலவு ஏற்படுகிறது. போச்சம்பள்ளி பகுதியில் கொப்பரை கொள்முதல் நிலையம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்