விதைகளை பகுப்பாய்வுக்கு அனுப்பும் போது கவனிக்க வேண்டியவை : விவசாயிகளுக்கு வேளாண் அலுவலர் அறிவுரை

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் சஜிதா கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விதை பரிசோதனை ஆய்வகத்துக்கு, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விதை விற்பனையாளர்கள் மற்றும் விதை உற்பத்தியாளர்கள தாங்கள் உற்பத்தி செய்த விதைகளை பரிசோதனைக்கு அனுப்பும் போது, குறிப்பிட்ட அளவுகளில் மாதிரிகளை அனுப்ப வேண்டும்.

தங்களிடம் இருப்பில் உள்ள விதைக்குவியலில் இருந்து நெல்விதை 400 கிராம், மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு, நிலக்கடலை, சூரியகாந்தி ரகம், ரகப்பருத்தி பஞ்சு உள்ளது, வெண்டை ஆகியவை ஒரு கிலோ வீதமும், தக்கைப்பூண்டு, சோளம் ஆகியவை 900 கிராம், கம்பு, மிளகாய், கத்தரி தலா 150 கிராம் வீதமும் மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும்.

விதை மாதிரிகளை துணிப்பையில் எடுத்து, அதில் விவரச்சீட்டு வைக்க வேண்டும். விவரச்சீட்டில் பயிர், ரகம், குவியல் எண், அறுவடை தேதி உள்ளிட்ட விவரங்கள் இருக்க வேண்டும். இத்துடன் அனுப்புநரின் முழு முகவரியிடப்பட்ட முகப்பு கடிதம் இணைத்து ஒரு மாதிரிக்கு ரூ.30 வீதம் கட்டணத்தை செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்