தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2021-ஐ அடிப்படையாகக் கொண்டு பொருளியல் மற்றும் புள்ளியல் துறை அலுவலர்கள் மூலம் வாக்காளரின் தெளிவு, அணுகுமுறை மற்றும் பழக்க வழக்கங்கள் குறித்த அடிப்படை ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஆய்வின் மூலம் வாக்காளர்களின் தேர்தல் பங்கேற்பை மதிப்பீடு செய்ய கல்வியறிவு, கல்வியறிவின்மை, தாழ்த்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட பழங்குடியினர், ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலின வாக்காளர்கள், இளம் வயதினர் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் போன்ற வகைகளின் கீழ், பல்வேறு வயது பிரிவினர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில், தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி மற்றும் திருச்செந்தூர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் தலா 5 வாக்குச் சாவடிகளில் இந்த ஆய்வு நடைபெறுகிறது. 18 வயது பூர்த்தி செய்த அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்காதற்கான காரணங்களை கண்டறியவும், தேர்தலில் வாக்கு செலுத்தாத வாக்காளர்களுக்கான காரணங்களை கண்டறியவும், வாக்காளர்களுக்கு தேர்தல் முறையில் உள்ள நம்பிக்கை மற்றும் முந்தைய தேர்தலில் உள்ள அனுபவம் போன்றவற்றை அறியவும், வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு அளிக்கப்படவேண்டிய வசதிகள் குறித்து அறியவும் இந்த ஆய்வு செய்யப்படுகிறது. இந்த ஆய்வை மேற்கொள்ள வரும் அலுவலர்களுக்கு உரிய தகவல் அளித்து, தூத்துக்குடி மாவட்டத்தில் 100 சதவீதம் ஆய்வு வெற்றி பெற வாக்காளர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago