டிஜிட்டல் சகாப்தம் குறித்த பயிற்சி :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளம் வேளாண் கல்லூரியில் 'தகவல் புரட்சி, டிஜிட்டல் சகாப்தம்- வேளாண் மாணர்களுக்கான சவால்கள் மற்றும் வாய்ப்புகள்' என்ற தலைப்பில் 5 நாட்கள் பயிற்சி நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் க.இறைவன் அருட்கனி அய்யநாதன் தொடங்கி வைத்தார். புள்ளியல் துறை இணை பேராசிரியர் ஆர்.கங்கை செல்வி, கணினி அறிவியல் துறை உதவி பேராசிரியர் ஆர்.செல்லமுத்து ஆகியோர் பயிற்சியை நடத்தினர்.

பெங்களூரு கால்நடை பல்கலைக்கழக பேராசிரியர்கள் லலித் அச்சோத், கே.வி.வேதமூர்த்தி ஆகியோர் பங்குச்சந்தை, தகவல் பகுப்பாய்வு, செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர மொழி உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளித்தனர். இளநிலை மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 30 பேர் பயிற்சியில் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்