திருப்பூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 314 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதினர். 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட இத்தேர்வில் 108 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்கள், மருத்துவம் படிக்க தகுதி பெற்றவர்களாக கருதப்படுவர். அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 120 பேர் நீட் தேர்வில் தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் தங்கள் மதிப்பெண்களை, தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்து, விண்ணப்பிக்க உள்ளனர். அதன்பிறகு ரேங்க் பட்டியல் வெளியாகும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் ரேங்க் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். கடந்த ஆண்டு திருப்பூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 18 மாணவ, மாணவிகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது என திருப்பூர் மாவட்ட நீட் தேர்வு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago